Adirai pirai
complaints உள்ளூர் செய்திகள்

அதிரையின் இன்றைய குறைகள்!

அதிரை வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. இன்று திங்கள் பள்ளி திறப்புநாளாக உள்ளது. இதனை பேரூராட்சி விரைந்து சுத்தம் செய்யுமா?

அதிரை செட்டுத்தோப்பு பகுதியில் திறந்தவெளி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த கால்வாய் சாக்கடை வெளியேறி வீதியில் ஓடும் சூழல் உள்ளது. அத்துடன் சுகாதார பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிரை தக்வா பள்ளி பின்புறமாக உள்ள சாக்கடை கால்வாய் மூடப்படாமல் உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இப்பகுதியில் நிலவும் இந்த பிரச்சனையால் பலர் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது.