Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை உள்ளிட்ட கடைமடைக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து பட்டுக்கோட்டையில் கடையடைப்பு!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கடையடைப்பு. கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, அதிரை, பேராவூரணி பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராததால் பட்டுக்கோட்டை சுற்று வட்டார மக்கள் பல போராட்டங்கள் நடத்தியும் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனை தொடர்ந்து அனைத்து கட்சி சார்பிலும் அனைத்து விவசாய சங்கம் சார்பிலும் பட்டுக்கோட்டையில் இன்று கடையடைப்பு நடைபெற்று வருகிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் பூட்டப்பட்டுள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.