Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட அதிரையர்கள்.!

கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்து பட்டுக்கோட்டையில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இது அனைத்து விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் சார்பில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அதிரையர்கள் பலர் இந்த சாலை மறியலில் கலந்து கொள்ள பட்டுக்கோட்டைக்கு படையெடுத்து சென்றனர்.

அரசு அதிகாதிகளும் பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கு மத்தியில் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 25ஆம் தேதிக்குள் தண்ணீர் வழங்குவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளித்துள்ளனர்.

அதிரை நீர்நிலை அறக்கட்டளை சார்பாக வருகின்ற 10ஆம் தேதி இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதாக கூறப்பட்டிருந்தது. அறிவித்த படி எந்த தொய்வுமின்றி மனு அளிக்க தீர்மானித்துள்ளனர்.