Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே நடைபெற்ற சுனாமி ஒத்திகை பயிற்சி!

சுனாமி தாக்குதல் ஏற்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டும் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய பெருங்கடல் முன் அறிவிப்பு அமைப்பு ஆகியவை பாதுகாப்பு ஒத்திகையை இணைந்து நடத்தின. தமிழக வருவாய் துறை, காவல் துறை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய மீட்புபடை, ரெட் கிராஸ், உள்ளாட்சி அமைப்பினரும் இதில் பங்கேற்றனர். அந்த வகையில் அதிரை கீழத்தோட்டம், ராஜாமடம் பகுதிகளில் நடைபெற்ற இந்த பயிற்சி ஒத்திகையில் மாதிரி சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஊர் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.