Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பேருந்து நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்தது மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை!

அதிரை பேருந்து நிலையத்தில் கடந்த 2011-2012 ஆம் ஆண்டின் பொதுநிதி திட்டத்தின்படி ₹2.50 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளான சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், பேரூராட்சியின் அலெட்சியத்தால் இன்று வரை அந்த கழிப்பறை மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. சமூக ஆர்வலர்கள், ஊடகங்களின் வாயிலாக தொடர் அழுத்தங்கள் தரப்பட்டும் பேரூராட்சி இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த கழிப்பறையில் கிடந்த குப்பைகள், மூட்டைகள் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பேரூராட்சி உயரதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் தொடர் புகார்களை தெரிவித்து வந்ததை தொடர்ந்து இன்று கழிப்பறை மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு வந்தது.