Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை தரகர் தெரு பகுதியில் தொடர்ந்து தகராறு செய்து வரும் வெறி நாய்கள்

அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் நாய் தொல்லை தொடர் பிரச்சனையாக நீடித்து வருகிறது. குறிப்பாக ஹாஜா நகர் மற்றும் தரகர் தெரு பின் புறம் உள்ள மைதானத்தில் தினம் தோரும் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.

இதனால் இப்பகுதியில் பொது மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் நடமாடவே அச்சமாக உள்ளது. காலை வேளையில் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கால்நடைகளை இந்த வெறிநாய்கள் கடித்து வருகின்றன. ஆகவே இப்பகுதியில் நடமாடிவரும் வெறி நாய்களை பிடித்து ஒழித்து தருமாறு பேரூராட்சி நிர்வாகத்தை இப்பகுதி பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.