Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை மக்களை காவு வாங்க காத்திருக்கும் மின் கம்பம்!

அதிரை புதுமனை தெருவில் உடைந்து விழும் நிலையில் மின்கம்பம் காட்சியளிக்கிறது. மின் விலக்கு அமைக்கும் நேரங்களில் கூட சேதமடைந்திருப்பது தெரியவில்லையா அல்லது தெரிந்தும் நடப்பது நடக்கட்டும் என வேடிக்கை பார்க்கின்றார்களா? மின் கம்பம் இந்த நிலையில் இருப்பது அதிரை மின்சார வாரிய ஊழியர்களுக்கு தெரியாதா?

ஒவ்வொரு முறையும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இணையம் வாயிலாக புகார் அளித்த பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெரும்பாலும் தாமதப்படுத்தப்படுகிறது.

அவசரம் என்று மின்சார வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றாலும். இணைப்பு கிடைப்பது கிடையாது இந்நிலையில் இப்படிபட்ட மின்கம்பத்தால் திடீரென ஏதேனும் அசம்பாவீதம் ஏற்பட்டால் அதற்கு அதிரை மின்சார வாரியம் பொருப்பேற்க்குமா?

விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?