Adirai pirai
Alert உள்ளூர் செய்திகள்

அதிரையில் இருளால் சூழப்பட்ட ஈசிஆர் சாலை… விபத்துகள் ஏற்படும் அபாயம்!

அதிராம்பட்டினம் ECR சாலையில் கரையூர்தெரு பெட்ரோல் பங்கு முதல் காதிர் முகைதீன் கல்லூரி வரை உள்ள 25க்கும் மேற்பட்ட சாலையோர மின்கம்ப விளக்குகள் எரியாமல் உள்ளன. விபத்துகள் அதிகம் ஏற்படும் இந்த சாலையில் வெளிச்சமின்மையினால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதே போல் காதிர் முஹைதீன் பள்ளி எதிரே செல்லுக் ஏரிப்புறக்கரை சாலை, ஜாவியால் சாலையிலும் ஆண்டுக்கணக்கில் மின் விளக்குகள் எரிவதில்லை. எனவே உரிய நிர்வாகத்தினர் இதில் கவனம் செலுத்தி துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.