Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் நோக்கி படையெடுத்த அதிரையர்கள்!

அதிரை குளங்களுக்கு நீர் நிரப்ப கோரி கலெக்டர் அலுவலகத்தில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக இன்று 17.09.2018 மனு அளிக்கப்பட்டது. சுமார் 30 வேன்கள் மற்றும் 5 கார்களில் மக்களை அழைத்து சென்றனர். இதில் சுமார் 600 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அனைவரும் கலெக்டரை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அனுமதித்தனர்.

கலெக்டர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அதிரைக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக வாக்குறுதி அளித்தார்.