Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை பிரில்லியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் லயன்ஸ் சங்கத்தின் சின்ன சின்ன செய்திகள் நிகழ்ச்சி

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் செப்டம்பர் 17 முதல் 30 வரையிலான தொடர்சேவைகள் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கிடையே

சின்ன சின்ன செய்திகள் எனும் தலைப்பில் கை கழுவும் முறை நகம் வெட்டுதல் காலணிகள் அணியும் முறைகள் தண்ணீர் அருந்துவதின் ஒழுங்கு முறைகள் போன்ற பல்வேறு ஒழுக்க முறைகளை பேரா.ஹாஜி முகம்மது அப்துல் காதர் அவர்கள் சொற்களஞ்சியங்களாக போதித்தார். இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பேரா.செய்யது அகமது கபீர், சூப்பர் அப்துல்ரஹ்மான், அப்துல்ஜலீல் ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டணர்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முதல்வர் ரகுபதி மற்றும் மேலாளர் சுப்பையன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.