Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

திமுக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட டி.ஆர்.பாலுவுக்கு அதிரை நிர்வாகிகள் வரவேற்பு!

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. கட்சித் தலைவர் பதவி மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார். இதேபோல் முதன்மைச் செயலாளரான துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டிருப்பதாக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று தஞ்சை திரும்பிய டி.ஆர்.பாலுவை மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகர் MLA தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இவர்களுடன் அதிரை பேரூர் கழக செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில் மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் பழஞ்சூர்.K.செல்வம், ஒன்றிய சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா K.இத்ரீஸ் அஹமது, மாவட்ட பிரதிநிதி பா.கு.பகுருதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.