Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அசம்பாவிதங்கள் இன்றி நடந்து முடிந்தது முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம்

முத்துப்பேட்டையில் இன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற்றது. இதை ஒட்டி அங்கு இருக்கக்கூடிய ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. திருச்சி மண்டல ஐ.ஜி வரதராஜர் தலைமையிலும், தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையிலும் மற்றும் திருச்சி டி.ஐ.ஜி. லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளார்கள். ஜாம்பவான் ஓடை பகுதியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலமானது சரியாக 3:30 மணியளவில் தொடங்கி அந்த வழியாக 19 சிலைகள் ஊர்வமலமாக கொண்டுசெல்லப்பட்டு பாமனி ஆற்றில் கரைக்கப்பட்டது.