Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே குடிநீர் வசதியின்றி குமுறும் அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்!

அதிரை அருகே மழவேனிற்காடு ஊராட்சி நடுவிக்காடு கிராமத்தில் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில்

மாணவ மாணவியர்களுக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 72 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் நடுவிக்காடு கிராமா சபை கூட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் தேக்கத்தொட்டி சரி செய்யாபடாத நிலையில் உள்ளது. அதன் மின் விசை பம்புகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தண்ணீர் இல்லாததால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அருகாமையில் உள்ள வீடுகளில் தண்ணீரை பெற்று மதிய சத்துணவை வழங்கின்றனர்.

இந்த விசயத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தலையிட்டு பள்ளி மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நடுவிக்காடு கிராமவாசிகளின் வேண்டுகோள்.