Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் சாலை விழிப்புணர்வு பிரச்சாரம்!

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் அதிராம்பட்டினம் காவல்துறை கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்புடன் இணைந்து சாலை விழிப்புணர்வுபிரச்சாரத்தை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடத்தினர். நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம.ஏ.அப்துல்காதர் தலைமை வகித்தார்  காவல்துறை சார்பு ஆய்வாளர் ராஜேஷ் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் நகர செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் சாலை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 1000 துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. 500 வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன.

பேரூராட்சியின் தெருக்களில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க செயலாளர் எம்.அப்துல்ரஹ்மான் பொருளர் எம்.அப்துல் ஜலீல் உடனடி முன்னாள் தலைவர் ஜலீலா முகம்மது முகைதீன் லயன் செல்வராஜ்  லயன் சாகுல்ஹமீது லயன் கண்ணன் லயன் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மதுக்கூர் மற்றும் அதிராம்பட்டினம் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் உறுப்பினர்கள் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம் உறுப்பினர் பேரா.கே.ஹாஜா அப்துல் காதர்கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.முடிவில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேரா.செய்யது அகமது கபீர் நன்றி கூறினார்.