Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை கடற்கரை தெரு குளத்தை 15 லட்சம் செலவில் சீரமைக்கும் முஹல்லா வாசிகள்!

அதிரை கடற்கரை தெரு வெட்டி குளத்தினை சீரமைக்கக்கோரி அரசு அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த பயனும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்களே ஒன்று கூடி இதற்கான வேலைகளை கையில் எடுத்துள்ளனர்.

இதற்காக சுமார் 15 லட்சம் ரூபாய் செலவில் குளம் தூர்வாறுதல், அதன் சுற்றி அமைந்துள்ள கருவ மரங்களை அகற்றுவதுடன், குளக்கரையோரம் நடை பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக மண் வழி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கான முழு தொகையையும் அப்பகுதியை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும், முஹல்லாவாசிகளிடமிருந்து திரட்டப்படுள்ளர்.

இது போன்று குளங்களை பாதுகாப்பது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயன் தர கூடும்.