Adirai pirai
poems உள்ளூர் செய்திகள்

அடிமட்ட அரசியல் ஆட்டம்… அகல பாதாளத்தில் அதிரையின் நீர் மட்டம்!

மழைக்கு அழைப்பு!

கறுத்து அதிர்ந்தது வானம்!

பூமியில் விதைகள் கூடவிழித்து பார்த்தன!

ஆனால் தரைக்கு மட்டுமே கிட்டியது

வெள்ள நிவாரண நிதி போல் மழை!

கடை மடைக்கு ஆத்துநீர்,

ஓர் அரசியல் தடை ?

காவிரி கலக்குது அங்கே,

௧ண்ணீர் மட்டும் தான் இங்கே!

கூடி கலைந்தது மேகங்கள் மட்டுமல்ல, மண்ணை

மட்டும் நம்பியுள்ள நம் இதயங்களும் தான்!

-மஹ்பூப் அலி