Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் கஞ்சா – அவசர கூட்டத்தை கூட்டிய சம்சுல் இஸ்லாம் சங்கம்!

நமதூர் மார்க்க அறிவுரை அதிகளவில் போதிக்கும் ஊராக இருக்கின்றது. பல இளைஞர்கள் பள்ளியில் படிக்கும் போதே குர்ஆன் மனனம் செய்வது போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட இளைஞர்களுக்கு மத்தியில் நமதூரில் சில மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளனர். தவறான கூட்டாளிகளால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சில மாணவர்கள் வழி மாறி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்கு ஒதுக்குபுறமாக இந்த சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தும்போது அவர்களை பிடித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கண்டித்து அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கஞ்சா பழக்கத்தை அதிரையில் இருந்து ஒழிக்கும் வகையிலும், அதற்கு இளம் தலைமுறை அடிமையாவதை கட்டுப்படுத்துவது குறித்தும் இன்று அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் பல முஹல்லாக்களை சேர்ந்தவர்கள் என 85 பேர் கலந்துகொண்டனர்.