Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை லயன்ஸ் சங்கத்தின் வீட்டுக்கு ஒரு நூலகம் திட்டம் தொடக்கம்!

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் தொடர் சேவையின் 5 வது நாளான இன்று லயன்ஸ் மாவட்ட ஆளுனரின் சிறப்புத் திட்டமான வீட்டுக்கு ஒரு நூலகம் எனும் திட்டத்தின் முதற்கட்டமாக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல் காதர் மற்றும் மாவட்ட தலைவர் பேரா.கே.செய்யது அகமது கபீர் இவர்கள் இல்லத்தில் உடனடி முன்னாள் தலைவர் ஹாஜி.எஸ்எம்.முகம்மது முகைதீன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சாகுல் ஹமீது ஆகியோர் நூலகங்களை திறந்து வைத்தனர்.

இந்கிகழ்ச்சியில் செயலர் சூப்பர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளர் எம்.அப்துல் ஜலீல், மாவட்ட தலைவர் என்.ஆறுமுகசாமி, உறுப்பினர் முகம்மது அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.