Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய கண்தான விழிப்புணர்வு முகாம்!

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தொடர்சேவையின் 6 வது நாளான இன்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.முகம்மது அப்துல் காதர் தலைமை வகித்தார். கிராமத்தலைவர் தங்க.வீரபத்திரன் லயன் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்தான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பேரா.மேஜர் எஸ்.பி.கணபதி பேரா.செய்யது அகமதுகபீர் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியை கிராமம் முழுவதும் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சூப்பர் அப்துல் ரஹ்மான், அப்துல் ஜலீல், செல்வராஜ், துரைக்கண்ணு, கிராம பொருளாளர் முத்துக்குமரன், உள்ளிட்ட கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்