Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரையில் கஷ்டப்படும் கணவன்கள்… இறைக்கும் இல்லத்தரசிகள்

ஆங்கில மருத்துவமனைகளில் நீங்கள் பார்த்தீர்களேயானால் அதிகம் முஸ்லிம்கள் தான் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். பெரும்பாலான மாற்றுமதம் சார்ந்தவர்கள் குறிப்பாக இந்து நண்பர்கள் மருத்துவமனைகளுக்கும், மருத்துவ டிஸ்பன்சரிகளுக்கும் அதிகம் படையெடுப்போர் இல்லை. ஆனால் எங்கு பார்த்தாலும் நிறைந்திருப்பது முஸ்லிம்கள் தான்.

கண்கூடாக பார்க்க முடிந்தவற்றை நேரடி கள ரிப்போர்ட்கள் மூலமும் இந்த கூற்றினை நிரூபிக்க முடியும். சித்தம், ஆயூர்வேதம், இயற்கைவழி என பிறர் நாடிப்போகும் அளவிற்கு முஸ்லிம்கள் போவதில்லை. அதுபோல யுனானி மருத்துவத்தையும் முஸ்லிம்கள் பெரிதாக நாடுவதில்லை.

வெளிநாடுகளில் வேலை செய்து பாடுபட்டு அனுப்பும் பணத்தை மருத்துவமனையில் அள்ளிவிடும் மனைவிகளை நாம் கண்டதுண்டு. சாதாரண விஷயங்களுக்கெல்லாம் பெரிய பெரிய பணம் பறிக்கும் இடமாக தேடிச்சென்று வைத்தியம் பார்த்துக்கொள்வதும், நான் அப்பல்லோவில் பார்த்தேன், நான் காவேரியில் பார்த்தேன், நான் ராமச்சந்திராவில் பார்த்தேன் என பெருமையடித்து கொள்வதும் அவர்களுக்கு அவசியப்படுகிறது.

எங்காவது ஏதாவது ஒரு அலங்காரமான பிரம்மாண்டமான ஷாப்பிங்மால் திறந்துவிட்டால் போதும்… அந்த மால் ஓனர்கள் விளப்பரப்படுத்தாமலே அணிதிரண்டு போயிடுறது. அவர்களை லட்சாதிபதி நிலையில் இருந்து கோடீஸ்வரானாக்காமல் ஓயமாட்டார்கள். நான் அங்க போயிட்டனே…நீங்கள் இன்னும் போகலயா ? என போகாதவர்களை குறை பேசுவது. அங்க உள்ள தேவையற்ற பொருட்களையெல்லாம் வாங்கி சாப்பிட்டுவிட்டு மறுநாள் குடும்பமா மருத்துவரிடம் செல்வது. இடங்களுக்கு போறதிலும் பெருமை, வாங்கித்திண்ணுறதிலும் பெருமை, கடைசியாக வைத்தியம் பார்த்ததிலும் பெருமை.

தெருவோரம் வாழுவோரும், கூலி வேலை செய்வோரும் எந்தவித உடல் பாதிப்புமின்றி வாழ்கிறார்கள் காரணம் அவர்கள் தெருவிலே வாழ்ந்தாலும் எதிர்ப்பு சக்தி கூடுதல். கர்ப்பம் தரித்தது முதல் அந்த பெண்கள் எந்தவித மருந்துகளும் ஊசிகளும் எடுத்துக்கொள்வதில்லை. அதிகபட்சமாக அவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை மட்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படும். குழந்தையும் ஆரோக்கியமாகவே பிறந்து வளர்கிறது. அதற்கு பிறகான எந்த விலையுயர்ந்த தடுப்பூசியும் அவர்கள் போட்டுக்கொள்வதில்லை. அவர்களிடம் பணம் இல்லாததது ஒரு விஷயம்… அவர்களுக்கு அது அவசியப்படுவதுமில்லை. கல்வியறிவு இல்லாவிட்டாலும் முன்னோர்களின் அறிவுரையும் அனுபவமும் அவர்களிடம் உண்டு.

முஸ்லிம்களிடத்தில் நிலவும் கல்வியறிவின்மை காரணமாகவே இன்று மருத்துவம் ஒரு வியாபாரமாகிவிட்டது. அவர்களது உயிர் மீதான பயமும், வியாதிகள் பற்றி அடிப்படை அறிவில்லாத காரணமும் இதற்கு வலுச்சேர்த்துவிட்டது.

-அதிரை உபயதுல்லாஹ்