Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் பள்ளி மாணவர்களின் கண்தான விழிப்புணர்வு பேரணி

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் காதிர்முகைதீன் கல்லூரி காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளிகளுடன் இணைந்து கண்தானத்தை வலியுறுத்தி பார்வைக்கோர் பயணம் எனும் தலைப்பில் மாபெரும் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.முகம்மது அப்துல்காதர் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார்

காதிர்முகைதீன் கல்லூரி முதல்வர் முகம்மது முகைதீன் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மேலாளர் சுப்பையன் முன்னிலை வகித்தனர். லயன் பேரா.கணபதி லயன் பேரா செய்யது அகமது கபீர் கண்தானத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர். கல்லூரி தாளாளர் மற்றும் லயன்ஸ் மாவட்ட தலைவர் சேதுசுப்பிரமணியன் இருவரும் இணைந்து கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்

இப்பேரணி கல்லூரி முதல் பேருந்து நிலையம் வரை 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கு கொண்டனர். இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் அப்துல்ரஹ்மான் அப்துல்ஜலீல் அப்துல்ஹமீது சாராஅகமது ராஜேந்திரன் பேரா முருகானந்தம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.