Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்! (Exclusive)

அதிரை சேர்மன் வாடி – நடுத்தெரு – கீழத்தெரு – EC சாலையில் இணையும் புதிய தார் சாலை சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பல ஆண்டுகளுக்கு பின் அமைக்கப்பட்டு வரும் இந்த சாலை பணிகள் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையக் கூடும்.

தார்சாலை அமைக்கும் பணி கடந்த திங்கள் அன்று துவங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது. அமைக்கப்படும் சாலைகள் இரண்டடுக்காக (Layer) அமைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சாலை மக்களுக்கு திருப்திகரமானதாக அமையுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். இரவு நேரங்களிலும் வேலைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.