Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில் நடைபெறும் “அமைதியை நோக்கி” வாழ்வியல் கண்காட்சி!

பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் பட்டுக்கோட்டை வடசேரி சாலை, பெரிய பள்ளிவாசல் அருகாமையில் உள்ள 3 ஸ்டார் திருமண மண்டபத்தில் அமைதியை நோக்கி என்ற வாழ்வியல் கண்காட்சி நடைபெறவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் கருத்தரங்கங்கள், புத்தக அரங்கம், வீடியோ அரங்கம், பல்சமய கருத்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொண்டு பயனடையலாம்.