Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம்

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் தொடர்சேவை நடைபெற்று வருகிறது. இதன் 10வது பகுதியாக அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி இணைந்து இன்று (28.09.2018) காலை பேரூராட்சி மன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.அப்துல்காதர் தலைமையேற்று உரையாற்றினார். பேரூராட்சி மன்ற சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் முஹம்மது சலீம் மரைக்கா இத்ரீஸ்அகமது சேக்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிளாஸ்டிக் விழப்புணர்வு பற்றி மேஜர் டாக்டர் கண்பதி பேரா.செய்யது அகமதுகபீர் உரையாற்றினார். முன்னதாக இந்நிகழ்ச்சியை லயன்ஸ் சங்க சாசன உறுப்பினர் ஜெபகர்அலி துவக்கிவைத்து துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் லயன்சங்க பொருப்பாளர்கள் சூப்பர் அப்துல்ரஹ்மான், அப்துல்ஜலீல், பிச்சைமுத்து, சாராஅகமது, ஆறுமுகசாமி, சாகுல்ஹமீது, பேரூராட்சி பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.