Adirai pirai
POLITICS இந்தியா

சமூக வலைதளங்களில் பொய்யை பரப்ப 32 லட்சம் பாஜக ஐடிகள்… அமித்ஷா பேச்சு!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில், பாஜக-வின் சமூகவலைத்தள பிரிவினருக்கான பயிற்சிக் கூட்டத்தில் பேசுகையில், இதனை அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசியிருப்பதாவது:உண்மையோ, பொய்யோ… இனிப்போ, கசப்போ… நம்மால் எந்தவொரு செய்தியையும் இணையத்தில் பரபரப்பாக்க முடியும். இணையதளத்தில் ராகுல் காந்தியைப் பின்பற்றுபவர்கள் எல்லாம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு நாம் பயப்படத் தேவையில்லை. மாநிலங்களிலும், நாட்டிலும் மட்டுமல்ல சமூகவலைத்தளத்திலும் நமது ஆட்சிதான் நடந்து வருகிறது.

நாம் ஏற்கெனவே, உத்தரப்பிரதேச தேர்தலுக்கு முன்பு, 2 வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கினோம். ஒரு குழுவில் 15 லட்சம் பேரையும், மற்றொரு குழுவில் 17 லட்சம் பேரையும் இணைத்தோம். மொத்தமாக சுமார் 32 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இந்த குழுவில், தினமும் காலை 8 மணிக்கு ‘அறிவோம் உண்மை” என்று செய்திகள் பகிரப்படுகின்றன.
சமூகவலைத்தளங்களில் வேலைபார்க்கும் நமது தொண்டர்கள் மிகவும் புத்திசாலிகள். ஒரு செய்தியை ஆரம்பம் முதல் இறுதிவரை துல்லியமாக பதிவிடுவதில் வல்லவர்கள். இது ஒன்றே போதும், நாம் யார் என்பதை நிரூபிப்பதற்கு. இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார். போட்டோ ஷாப் மூலம் போலியான புகைப்படங்களையும், பொய்ச் செய்திகளையும் பரப்புவதை பாஜக-வினர் நீண்டகாலமாக செய்து வருகின்றனர். அதனை உறுதிப்படுத்துவதாக அமித்ஷாவின் பேச்சு அமைந்துள்ளது.

நன்றி: தீக்கதி