Adirai pirai
posts

போதையின் பிடியில் அதிரை, தடுக்க நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!

அதிரையில் தற்போது அதிகளவிலான மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர். தவறான கூட்டாளிகளால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சில மாணவர்கள் வழி மாறி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்கு ஒதுக்குபுறமாக இந்த சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தும்போது அவர்களை பிடித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கண்டித்து அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் பல முஹல்லாக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக்கூட்டம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. இதனை அடுத்து நேற்று அஸர் தொழுகைக்கு பிறகு கஞ்சா பழக்கத்தை அதிரையில் இருந்து ஒழிக்கும் வகையிலும், அதற்கு இளம் தலைமுறை அடிமையாவதை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள், பெரியோர்கள் கலந்துகொண்டனர்.