Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

அதிரையில் அரசு பேருந்துக்குள் குடைப்பிடித்து செல்லும் பயணிகள்!

அதிரை பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு PP ஏ37 பேருந்தில் மழை நீர் உள்ளே இருந்த பயணிகள் மீது கொட்டியது. பேருந்தின் நடுவில் இருந்த ஓட்டை வழியாக பெய்த மழை நீர் மேலே விழாமல் இருக்க பயணிகள் பேருந்துக்குள் குடைப்பிடித்து சென்றனர். இது குறித்து நடத்துனரிடம் பயணிகள் சிலர் புகார் அளிக்க அவர், இது புதிய பேருந்து என தெரிவித்துள்ளார்.