Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு…

அதிரை கடற்கரைத்தெருவில் கடந்த பல மாதங்களாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அடுத்து யாரையும் எதிர்பார்காமல் அப்பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து சுகாதார பணிகளை முஹல்லாவாசிகள் செய்து வருகின்றனர். 

தற்போது மழைக்காலம் வேறு தொடங்கியுள்ளதால் கழிவு நீர் கால்வாயில் மழை நீரும் தேங்கி அனைத்தும் வீதியில் வெளியேறு சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு கொடிய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசனை அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இது போல் பல முறை மனு கொடுத்தும் நிரந்தர தீர்வை பேரூராட்சி ஏற்படுத்தவில்லை. மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை பேரூராட்சி எப்போது புரிந்துகொள்ளப்போகிறதோ…