Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை குளங்களை வந்தடைந்த நீர்!

அதிரை குளங்கள் பல மாதங்களாக நீரின்றி காணப்பட்ட நிலையில், இதற்காக நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பு உருவாக்கியதுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் முயற்சியாக இன்று கல்லணையில் இருந்து காட்டு குளத்திற்கு நீர் கொண்டு வரப்பட்டது. இது தொடர்ந்து ஊரில் உள்ள பிற குளங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி தொக்காளி காடு அணையில் இருந்து பம்பிங் முறை மூலமாக நிரந்தரமாக குளங்களுக்கு நீர் நிரப்ப ஓர் திட்டத்தினை செயல்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.