Adirai pirai
உலகம்

இந்தோனேசியாவில் 1,800ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

இந்தோனேசிய நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார தீவுப்பகுதியில் கடந்த வாரம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்திற்கு அங்குள்ள நகரமே அழிக்கப்பட்டது. கடற்கரையோரமாக இருந்த வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் தரைமட்டமானது. 

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் சிக்கித்தவித்த மக்களையும், இறந்த மக்களையும் மீட்கும் பணியில் காவல் துறையினரும் இராணுவ அதிகாரிகளும், மீட்பு படையினரும் மீட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளனர். 

மேலும் சுனாமி தாக்காத இடங்களில் நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் நபர்களை மீட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இன்றைய நிலவரப்படி, சுமார் 1763 நபர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான அறிவிப்பின் படி சுமார் 5000 க்கும் மேற்பட்ட நபர்களை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.