Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/adiraipi/public_html/wp-content/themes/pennews/functions.php on line 73
மதவாத பயங்கரவாதிகளுக்கு பயமூட்டிய மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு! - Adirai pirai
Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

மதவாத பயங்கரவாதிகளுக்கு பயமூட்டிய மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு!

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள், மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

எனவே, மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டும் வகையில் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டை திருச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்கமாக, சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் மாணவ சமூகம் எழுகவே எனும் தலைப்பில் கருத்தரங்கும், மாலை 3 மணிக்கு இளைஞர் அணியின் அணி வகுப்பு ஊர்வலமும் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு சமுதாய அரங்கமும், அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார், தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை தலைவர் உமர் ஃபாரூக் தாவூதி, கிறிஸ்தவ நல்லெண்ணெ இயக்கத்தின் இனிகோ இருதயராஜ் ஆகிய மும்மத தலைவர்கள் உரையாற்றினர். மாலை 4 மணிக்கு மாநாட்டு உரை தொடங்கியது. இதில், புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, திக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ். திருநாவுக்கரசர், திமுக துணைப் பொதுச் செயலர் வி.பி. துரைசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பாஜக அரசின் மதவெறி, ஊழல் செயல்பாடுகளை கண்டித்து உரையாற்றினர்.

இறுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் எஸ். ஹைதர் அலி, மமக பொதுச் செயலர் ப. அப்துல் சமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த மாநாட்டுக்காக 30 வாகனங்களில் அதிரையை சேர்ந்தவர்கள் திருச்சி சென்றனர்.