Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு தண்ணீர் வருவதில் புதிய சிக்கல்..!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மேல உளூர் அருகே கல்லணை கால்வாய் கிளை ஆறான கல்யாண ஓடையில் பத்தடி நீலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது நடவு செய்யப்பட்ட வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிற்கள் மூழ்கின. இதனால் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு போராட்டத்திற்கு பிறகு அதிரைக்கு நேற்று தண்ணீர் கிடைத்துள்ள நிலையில் இதனால் குளங்கள் நிரம்புவதில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.