Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

அதிரை பேரூராட்சியின் நூதன மழை நீர் சேகரிப்பு திட்டம்

அதிரை ஏ.ஜே.நகர் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாததால், சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழைகாலமுன் தொடங்கிவிட்டதால் அப்பகுதியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்க்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் போக்குவரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். வாகனம் ஓட்டிகள் அச்சதுடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் சாக்கடை ஓடுவதால் துர்நாற்றமும் அதிகளவில் வருகிறது. அத்துடன் சேர்ந்து குப்பைகளும் கிடப்பதால் சுகாதாரமற்ற நிலையில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். மழை ரீரை, ஆற்று நீரை நீர்நிலைகளில் சேமிக்காத பேரூராட்சி கொட்டும் மழையை சாலையில் தேக்கி வைக்கிறதோ என்னவோ…!