Adirai pirai
உள்ளூர் செய்திகள்

ஒரு மாசத்துக்கு முன் போட்ட ரோடா இது? கொதிக்கும் அதிரையர்கள்

அதிரை சேர்மன் வாடி – நடுத்தெரு – கீழத்தெரு – ECR சாலையில் இணையும் புதிய தார் சாலை சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த மாதம் தீவிரமாக நடைபெற்றது. அப்போதே சாலை அமைக்கும் முறை சரியானதாக இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இந்த நிலையில் சேர்மன் வாடியிலிருந்து செக்கடி மேடி செல்லும் சாலையில்ஜல்லிகள் தனித்தனியாக பெயர்ந்து வரத்தொடங்கியுள்ளன.

சில நாட்கள் பெய்த லேசான மழைக்கே இந்த புதிய சாலையின் நிலை இந்த அளவுக்கு மோசமானதை கண்டு அதிரை மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதில் எவ்வடி லட்சம் முறைகேடு நடந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம். மொத்தத்தில் மக்களாகிய நாம் தான் முட்டாள்களாக ஆக்கப்படுகிறோம்.