Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

மழை நீர் வடிகாலை தூர்வாராமல் தூங்கிக்கொண்டிருக்கும் அதிரை பேரூராட்சி!

அதிரை காதிர் முஹைதீன் பள்ளி அருகே ஏரிப்புரக்கரை வரை மழை நீர் வடிகால் கால்வாய் உள்ளது. மழை நேரங்களில் இந்த கால்வாய் தூர்வாரப்பட்டு இதில் வ்ரும் தண்ணீர் மூலம் கடற்கரைத்தெரு வெட்டிக்குளம் நிரப்பப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அதிரை கடற்கரைத்தெரு முஹல்லா சார்பாக வெட்டிக்குளம்முழுமையாக தூர்வாரப்பட்டு தண்ணீருக்காக மக்கள் காத்திரிருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு. இந்த முறையும் வழக்கம் போல் தூங்கிக்கொண்டே கால்வாயை தூர்வாராமல் விட்டது அதிரை பேரூராட்சி. விளைவு அதிரை வெடிக்குளத்தை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிரை பேரூராட்சி மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சி அலுவலகங்களுக்கு சென்று கால்வாயை தூர்வார வலியுறுத்தி மனு அளித்துள்ளனர் அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் மன்றத்தினர்.