Adirai pirai
உள்ளூர் செய்திகள்

குளம் போல் காட்சியளிக்கும் அதிரை MSM நகர்!

அதிரை ECR சாலையை தாண்டி காதிர் முஹைதீன் கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ளது அதிரை MSM நகர். அரசால் பல்வேறு துறைகளில் புறக்கணிப்புக்கு அளாகி வருகிறது. தாழ்வான பகுதிகளில் ஒன்றான இங்கு வசிக்கும் மக்கல் மழை நேரத்தில் பெரும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இங்குள்ள காலி இடங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கொசுத்தொலைக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் அப்பகுதியில் பல்வேறு கொடிய நோய் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.