Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை பேரூராட்சியின் டெங்கு ஒழிப்பு பேரணி.!

அதிரையில் இன்று டெங்கு ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

இன்று 11.10.2018 வியாழக்கிழமை, டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உட்பட்டோர் அணிவகுத்து பேரணி நடத்தினர்.

இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட அதிகம் வாய்புகள் உள்ளது. பேரூராட்சியால் மட்டும் டொங்குவை ஒழிக்க இயலாது நமதூர் மக்களும் ஒத்துழைப்பு மிக அவசியமாக இருக்கின்றது. வீடுகளையும் அதன் சுற்றுப்பகுதியையும் தூய்மையாக வைப்பது இது போன்ற நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வழிவகுக்கும்.