Adirai pirai
உலகம் தமிழகம்

திருச்சியில் விமான நிலைய கோபுரத்தின் மீது மோதிய துபாய் விமானம்

திருச்சியிலிருந்து 130 பயணிகளுடன் இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமானம் துபாய் புறப்பட்டது. தரையிலிருந்து மேலே பறக்க தொடங்கும்போது விமானம் ஏடிசி கட்டுப்பாட்டு கோபுரத்திலும், சுற்றுச்சுவரிலும் உரசியவாறு சென்றது. இதனால் கட்டுப்பாட்டு கோபுரமும், சுற்றுச்சுவரும் சேதமடைந்தன. இருப்பினும், விமானத்தை சாமர்த்தியமாக இயக்கிய விமானி பாதுகாப்புடன் மும்பைக்கு ஓட்டிச்சென்றார். தற்போது அந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரச் விமானம், மும்பை விமான நிலையம் சென்றடைந்ததாக கூறப்படுகிறது.