Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற பி.ஜே-வின் பயான் நிகழ்ச்சி!

TNTJ கிளை 3இன் கீழ் செயல்பட்டு வந்த மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளி முழுவதுவமாக அதிரை தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் மாற்றப்பட்டது. மேலத்தெரு சாணாவயலில் உள்ள இந்த பள்ளியில் இன்று பி.ஜெய்னுல் ஆபிதீனின் பயான் நிகழ்சை நடைபெறும் என விளம்பரம் செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தாருத் தவ்ஹீத் அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பி.ஜே வருகையை கண்டித்து போஸ்டர்களும், இன்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று அதிரை வந்த பி.ஜே., ஹிதாயா பள்ளியில் குத்பா உரையாற்றினார்.