Adirai pirai
உள்ளூர் செய்திகள் தமிழகம்

லைசைன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டாதீர்கள்; மாணவர்களுக்கு தஞ்சை எஸ்.பி அறிவுரை

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தஞ்சை மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் மாணவர்கள் ஒட்டுனர் உரிமம் இன்றியும், தலைக்கவசம் அணியாமலும் வாகனங்களை ஒட்டக்கூடாது. சாலை விதிகளை கடைப்பிடித்து விபத்தில் இருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும் என்றார். வீரியம் மிக்க விதைகள் விண்ணில் கூட முளைத்து விடும் என தெரிவித்த அவர், மாணவர்களும் வீரியம் மிக்க விதைகளாக இருக்க வேண்டும் என்றார்.