Adirai pirai
INFORMATION இந்தியா உலகம் தமிழகம்

70% வரை அசத்தல் ஆஃபரை அறிவித்தது ஏர் ஏசியா

ஏர் ஏசியா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அக்டோபர் 15 முதல் 28 வரை முன்பதிவு செய்து அக்டோபர் 15 முதல் 30-6-2019 வரை பயணம் செய்ய விரும்புவர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வழித்தடங்களான பெங்களூரு, புதுடெல்லி, கொல்கத்தா, கொச்சி, கோவா, ஜெய்ப்பூர், சண்டிகர், புனே, கவுகாத்தி, இம்பால், விசாகப்பட்டினம், ஐதராபாத், ஸ்ரீநகர், பக்டோக்ரா, ராஞ்சி, புவனேஸ்வர், நாக்பூர், இந்தூர், சூரத், அம்ரிஸ்டர் மற்றும் சென்னை ஆகிய 21 முக்கிய நகரங்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு இந்த சலுகை பொருந்தும்.
மேலும், சர்வதேச வழித்தடங்களான கோலாலம்பூர், பாங்காக், கிராபி, சிட்னி, ஆக்லாந்து, சிங்கப்பூர், பாலி உள்ளிட்ட பிற நகரங்களுக்கான விமான பயணத்துக்கும் இந்த சலுகையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு கட்டணச் சலுகையை பெறுவதற்கான முன்பதிவுகள் அனைத்தும் ஏர் ஏசியா டாட்காம் மற்றும் ஏர் ஏசியா மொபைல் ஆப் (airasia.com and the AirAsia mobile app) மூலமாக செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.