Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, இதுவரை மூன்று முறை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெற்ற நிலையில், இன்று கடைசி முகாம் நடைபெறுகிறது. அதிரையில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இந்த முகாமில் அதிரையர்கள் பலர் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மனுக்களை அளித்தனர். அத்துடன், பிழை திருத்தம், முகவரி திருத்தம், புதிய வாக்காளர் இணைப்பு மனுக்களை வழங்கினர்.