Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

EXCLUSIVE: தமிழகத்தின் MAP போல் காட்சியளிக்கும் அதிரை குளம்… யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்!

அதிரையிலிருந்து சென்னை வந்து ஒரு மாதத்திற்கு மேல் கடந்து விட்டதால் ஊரின் நினைவுகள் அதிகம் வரத்தொடங்கின. இது போன்ற சமயங்களில் மொபைலில் உள்ள ஊரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்ப்பதும், கூகுள் மேப்பில் அதிரையை ஜூம் செய்து பார்ப்பதும் எனது வழக்கம். அப்படி இன்று அதிரையை கூகுள் மேப்பில் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது சிறிதாக ஒரு வடிவத்தை கண்டு பெரும் வியப்படைந்தேன். மேலும் ஜூம் செய்து பார்த்தபோது அந்த வடிவம் தமிழகத்தின் மேப் போன்ற வடிவமைப்பில் இருந்தது. அது என்ன குளம் என கேட்கிறீர்களா..? நமதூரின் நுழைவு வாயிலான பட்டுக்கோட்டை சாலையில் அமர்ந்திருக்கும் கரிசல்மணி குளம் தான் அது. இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இவ்வளவு ஆண்டுகளாக இதுவரை அறியப்படவில்லை. அதிரையை சேர்ந்த ஒரு குளத்திற்கு இது போன்ற சிறப்பு இருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சியும், வியப்பும் அடைந்தேன். இந்த பதிவு அதிரையர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதி வாசகர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன்.

-நூருல் இப்னு ஜஹபர் அலி