Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

EXCLUSIVE: அதிரை ரயில்நிலைய கட்டுமானம் முடிவதற்குள் உடைந்து நிற்கும் தூண்..!

காரைக்குடி – திருவாரூர் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு ரூ. 711 கோடி செலவில் அகல ரயில் பாதை அமைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக,  தஞ்சாவூர் மாவட்டம், அதிரை ரயில் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் கடந்த 3.7.2017 -ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டடம், டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வறை என அனைத்து வசதிகள் கொண்ட புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரயில் நிலையத்தில் நிழற்குடைக்காக அமைக்கப்பட்டுள்ள இரும்புத்தூணை தாங்கி நிற்கும் கான்கிரிட் பில்லர்இல் விரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில் நிலைய கட்டுமானம் முடிவதற்குள் தூண்களில் எல்விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.