Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் SDPI கட்சியினரின் அழைப்பு பணி தீவிரம்.!

சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா நடத்தும் அரசியல் எழுச்சி மாநில மாநாடு வருகின்ற 21.10.2018 ஆம் தேதி ஞாயிறு அன்று திருச்சி ஜி கார்னரில் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொள்ள வேண்டி அதிரை திமுக, அதிமுக, மமக, காங்கிரஸ் பிற அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுக்கும் SDPI கட்சியினர் அழைப்புகள் விடுத்துள்ளனர்.

மாநிலம் தழுவிய மாநாடு என்பதால் இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிற ஊர்களில் இருந்து வருபவர்களுக்காக வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது போல் நமதூர் மக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரத்யேக வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.