Adirai pirai
exclusive FLASH NEWS உள்ளூர் செய்திகள்

ஏரிப்புறகரை ஊராட்சியால் புறக்கணிக்கப்படும் பிலால் நகர்!

ஏரிப்புறகரை ஊராட்சிக்குட்பட்ட பகுதி பிலால் நகர். இங்கு வசிப்பவர்களில் பலர் மிகவும் ஏழ்மை நிலையிலும் அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர்.

இந்த பகுதி புறக்கணிக்கப்பட்ட பகுதி என்றே கூறலாம். கழிவுகள் சூழ்ந்து கேட்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கழிவு நீர் வீதி எங்கும் தேங்கி கிடக்கும் சூழல் நிலவுகின்றது. இதனால் பல தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை, கொசுத்தொல்லை, கழிவு நீர் என சுகாதாரமற்ற பகுதிக்கு முன் உதாரணமாக இப்பகுதியை கூறலாம்.

முறையான சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. குண்டும் குழியுமான சாலைகள் அதில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்திக்கு உறுதுணையாக விளங்குகின்றது. எந்த ஒரு அரசு அதிகாரிகளும் இப்பகுதியை கண்டுகொள்வதில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு மிகவும் பின் தங்கிய நிலையில் தான் இப்பகுதி காணப்படுகிறது.

இந்த மக்கள் ஏன் புறக்கணிக்கப்படுகின்றனர்?

ஏழ்மையான மக்கள் என்பதாலா?

இவர்களை கொண்டு எந்த ஆதாயமும் இல்லை என்பதாலா?

வசதியான மக்கள் இருக்கும் பகுதிகளில் மட்டும் தான் சமூக ஆர்வலர்களும் சேவை செய்வார்கள் போலும்.