Adirai pirai
உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டை – தஞ்சை இடையே 2 பேருந்துகள் மோதிக்கொண்டதில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் மேல உளூர் கிராமத்தில் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை சென்ற தனியார் பேருந்தும், பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சை சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தஞ்சை – பட்டுக்கோட்டை இடையே செல்லும் தனியார் பேருந்துகள் போட்டிப்போட்டுக்கொண்டு அதிவேகமாக செல்வதே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.