Adirai pirai
உள்ளூர் செய்திகள்

மதுக்கூரில் CBD மற்றும் காவல்துறை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

மதுக்கூரில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) மற்றும் காவல் துறை இணைந்து நாளை (20/10/2018) காலை சரியாக 10:00 மணிக்கு மதுக்கூர் பேருந்து நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வாகன விளக்குகளுக்கு நடுவே கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு துண்டு பிரசுரம் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் பங்கையும் செலுத்தி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க கைகோர்ப்போம்.

இப்படிக்கு,

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD)

மதுக்கூர் நகரம்,

தஞ்சாவூர் மாவட்டம்.