Adirai pirai
islam POLITICS இந்தியா

சபரிமலைக்குள் ரெஹானா நுழைய முயன்றதன் பின்னணியில் பாஜக தலைவரா?

சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்று பிரபலமானவர் பாத்திமா ரெஹானா. தற்போது இவர் ஒரு முஸ்லீம் எனவும், கோவிலை அவமதிக்கும் வகையில் ரெஹானா நடந்துகொண்டதாகவும் எச்.ராஜா போன்ற பாஜகவினர் மத மோதலை தூண்ட முயற்சித்து வருகின்றனர். அனால், இஸ்லாமிய பெயரை உடைய ரெஹானா அந்த மதத்தை கைவிட்டு இந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசானில் சேர்ந்து அத்வைத்தா மற்றும் வேதாந்த சித்தங்களை கற்றுத் தேர்ந்தவர். இந்து மதத்தினை பின்பற்றி வருகின்றேன் என்பதால் தான் காவல்துறையினர் என்னை சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர் என்று விளக்கம் அளித்திருக்கிறார். மனோஜ் ஸ்ரீதரன் என்பதை திருமணம் செய்துள்ள ரெஹானா ஆபாச படம் ஒன்றில் நிர்வாணமாக நடித்தவர்.

இந்த நிலையில், இவர் சபரிமலை சென்றதன் பின்னணி குறித்த மேலும் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்திருக்கிறது. கேரளாவில்  ஆன்லைன் விபசாரத்தில் சிக்கி முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட ரெஸ்மி நாயர்,  ரெஹானா சபரிமலைக்குள் நுழைவதற்கு முன்  பாரதீய ஜனதா தலைவர் சுரேந்திரன் என்பவரை மங்களூரில் சந்தித்தார் என்றும் அதன் பிறகே இது போன்ற சமபவம் நடைபெற்று உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர்கள் சந்திப்பின் போது சபரிமலையில் பதற்றத்தை  தூண்டுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் கூறி இருந்தார்.

தேவஸ்தான அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்  இந்த பதிவை பார்த்த பிறகு  அய்யப்பன் சன்னதிக்கு  2 பெண்கள் செல்ல முயற்சி மேற்கொண்டதில் சதி நடந்துள்ளதாக கூறினார். இதற்கு பதில் அளித்த ரெஹானா பா.ஜ.க. தலைவருடன்  தொடர்பு வைத்திருப்பதாக கூறப்பட்ட கூற்றுக்கள், சமூக ஊடகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டதாக கூறினார்.

ரெஹானா கூறும்போது,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பா.ஜ.க தலைவர் சுரேந்திரன் மாதவிடாய் வயதில் சபரிமலையில் பெண்களின் நுழைவை ஆதரிக்கும் ஒரு பதிவை பதிவேற்றியிருந்தார். என் நண்பர்களில் ஒருவர் இந்த இடுகையில் என்னை குறியிட்டார். நான் இந்த கருத்தை ஆதரித்தபோது, இந்த குறிப்பை ஏற்றுக்கொண்டேன். சுரேந்திரனுடனான எனது ஒரே தொடர்பு இது தான்  என்று ரெஹானா மறுத்துள்ளார். மங்களூரில் நான் சுரேந்திரனை  சந்தித்ததாகவும், அந்த சந்திப்பை அவர் அறிந்திருந்தார் என்பதும் முற்றிலும் தவறானது என கூறி உள்ளார்.