Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில் காரை தலைமுடியால் இழுத்து 8 வயது சிறுமி கின்னஸ் சாதனை முயற்சி!

பட்டுக்கோட்டையில் வசித்துவரும் வெங்கடேஷ் மற்றும் உஷா தம்பதியின் மகள் சம்யுத்தா என்ற 8 வயது சிறுமி தன் தலை முடியில் கயிற்றை கட்டி கயிற்றின் மறுமுனையினை காரில் கட்டியபடி காரை இழுத்து கின்னஸ் சாயின் தனைக்கு முயற்சி செய்தார்.

சம்யுத்தா தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த சிறுமி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என எண்ணி தமது கராத்தே மாஸ்டர் இளையராஜாவிடம் கடந்த ஆறு மாதகாலமாக தீவிர பயிற்சி எடுத்து நேற்று காலை தனது தலை முடியால் 890 கிலோ எடை உள்ள காரினை 100 மீட்டர் தூரத்தினை 77 நொடிகளில் இழுத்து சென்றார்.

அந்த நிகழ்வினை வீடியோ பதிவு செய்து கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளனர். இந்த சிறுமியின் கின்னஸ் சாதனை முயற்சியினை பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.